ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தங்கர்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில், பயங்கரவாதிகள் திடீரென பதுங்கியிருந்து தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில் பாதுகாப்பு படையினரும் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையாக துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.