தேசிய செய்திகள்

அன்னிக்கேரி தாலுகாவில் கனமழை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

அன்னிக்கேரி தாலுகாவில் கனமழை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் கிராம மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

உப்பள்ளி;

தார்வார் மாவட்டம் அன்னிக்கேரி தாலுகா பத்ராபூர் கிராம பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை காட்டி தீர்த்து வருகிறது. இதனால் அந்த கிராமத்தின் தாழ்வான பகுதியில் இருப்பவரின் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பெய்த கனமழைக்கு அதே பகுதியை சோந்த விவசாயிகளான சோமண்ணா கவுடா மற்றும் ரஹிம்பீ அஞ்சனால் ஆகியோரின் வீட்டின் சுவர் இடித்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பஞ்சாயத்து அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் அரசிடம் இருந்து நிவாரணம் பெற்று தருவதாக உறுதியளித்தனர். இதேபோல் அன்னிக்கேரி, குந்துகோல் போன்ற பல பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த கனமழை காரணமாக மக்கள் அவதி அடைந்து உள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து