தேசிய செய்திகள்

கர்நாடகாவில் கனமழை; வெள்ளநீரில் மிதக்கும் பெங்களூரு விமான நிலையம்

கர்நாடகாவில் கனமழையால் பெங்களூரு விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்து பயணிகள் தத்தளித்து வருகின்றர்.

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கோனப்பன அக்ரஹார பகுதியில் வீடு ஒன்றில் மின் கசிவு ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். மற்றொருவர் தப்பிவிட்டார்.

இந்நிலையில், கனமழையால் பெங்களூரு விமான நிலையம் வெள்ளநீரில் தத்தளித்து வருகிறது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பலர் விமான நிலையத்திற்கு வெளியே டிராக்டரில் சென்ற நிகழ்வையும் காண முடிந்தது.

பெங்களூருவில் இன்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்