தேசிய செய்திகள்

கேரளாவில் கனமழை: பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு

கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. #Kerala #HeavyRain

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த பருவ மழை 12-ம் தேதி வரை தொடரும் என கேரள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 4 நாட்களாக கன மழைபெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது.

பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி, கோழிக்கோடு, கன்னூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. மலைப்பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த கன மழைக்கு தற்போது 13 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கன மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை