தெலுங்கானாவில் கனமழை: 3 நாட்களுக்கு காணொலி காட்சி வழியே ஐகோர்ட்டு இயங்கும்
தெலுங்கானாவில் கனமழையை முன்னிட்டு நாளை முதல் 30ந்தேதி வரை காணொலி காட்சி வழியே ஐகோர்ட்டு இயங்கும்.
தினத்தந்தி
ஐதராபாத்,
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு தெலுங்கானா ஐகோர்ட்டில் உள்ள அனைத்து அமர்வுகளும் நாளை முதல் வருகிற 30ந்தேதி வரை காணொலி காட்சி வழியே இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.