தேசிய செய்திகள்

உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழையால் சாரதா ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், அங்கு பாயும் சாரதா ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அதன் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

டெஹ்ராடூன்,

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் நேற்று பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் கனமழை காரணமாக, அங்கு பாயும் சாரதா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டேடுகிறது. இதனால் சம்பாவத் மாவட்டத்தில் உள்ள பான்பாஷாவில் அமைந்துள்ள அணை நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே திறந்துவிடப்பட்டு உள்ளதால், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள 2 மாவட்டங்கள் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்