அகர்தலா,
வடகிழக்கு மாநிலங்களில் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திரிபுரா மாநிலம் அகர்தலாவில் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளன.
மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் முடங்கியுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது. இதனிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.