தேசிய செய்திகள்

இமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மலைவாசஸ்தலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

தினத்தந்தி

சிம்லா,

மலைவாசஸ்தலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பனிப்பொழிவின் காரணமாக 1,355 மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது இதனால் மக்கள் மிகுந்த அவதிப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் ஏற்பட்ட பனிப்பொழிவுக்குப் பிறகு 3,020 டிரான்ஸ்பார்மர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை டிரான்ஸ்மிஷன் லைன்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மூடப்பட்டன, சில இடங்களில் மரங்கள் விழுந்ததால் கம்பிகள் அறுந்தன.

பாதிக்கப்பட்ட மொத்த மின்மாற்றிகளில், 1,965 மின்மாற்றிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் 1,355 மின்மாற்றிகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை. பனி மற்றும் நிலச்சரிவு காரணமாக சில இடங்களுக்குச் செல்லும் சாலைகள் தடைப்பட்டுள்ளதால், எங்கள் ஊழியர்களால் இந்த இடங்களுக்குச் செல்ல முடியவில்லை,என்று வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் பிரஷர் கூறியுள்ளர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்