தேசிய செய்திகள்

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: 3-வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக, 3-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் 3-வது நாளாக நாட்டின் பிற பகுதிகளில் இருந்து அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. நுழைவுவாயிலான ஜவஹர் சுரங்கப்பாதையில் கடுமையாக பனி படிந்துள்ளது. அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

விமான சேவையும் 7 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் வெப்பநிலை மைனஸ் 0.5 டிகிரி செல்சியஸ் ஆகவும், ஜம்முவில் 9.6 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கிறது. இதனால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையிலும் வாகன போக்குவரத்து முடங்கியது. சாலையில் படிந்துள்ள பனியை அகற்றும் பணி நடந்து வருகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு