புதுடெல்லி,
மிக மிக முக்கிய பிரமுகர்கள் பயன்பாட்டுக்காக ரூ.3,600 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர்கள் வாங்க செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் லஞ்சம் கைமாறியதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இதில், இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மிசெல், துபாயில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
அவர் 4 நாட்கள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்கப்பட்ட பிறகு, நேற்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 28-ந் தேதி வரை 10 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அரவிந்த் குமார் உத்தரவிட்டார்.
கிறிஸ்டியன் மிசெல் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை 22-ந் தேதிக்கு அவர் தள்ளிவைத்தார்.