ஜம்மு,
காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று பிற்பகலில் வழக்கமான ரோந்து பறப்பில் ஈடுபட்டிருந்தது. அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், புர்மண்டல் பகுதியில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஹெலிகாப்டரில் இருந்த 5 வீரர்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், கோளாறு சரிசெய்யப்பட்டபின் ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது என்றும் பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன. கால்பந்து மைதானத்தில் ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறங்கியதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.