தேசிய செய்திகள்

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன் - டெல்லி கோர்ட்டு உத்தரவு

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில், துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில், துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ராஜீவ் சக்சேனா என்பவர் மீதும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர் துபாயில் 2 நிறுவனங்களின் இயக்குனராக உள்ளார். அவர் சில வாரங்களுக்கு முன்பு, துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார்.

தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, அவர் ஜாமீனில் விடுவிக்க கோரினார். அதை ஏற்று, அவரை ஜாமீனில் விடுவிக்க டெல்லி தனிக்கோர்ட்டு நீதிபதி அரவிந்த் குமார் இன்று உத்தரவிட்டார். ரூ.5 லட்சம் ஜாமீன் தொகை தாக்கல் செய்யுமாறு கூறிய நீதிபதி, அனுமதி இல்லாமல் வெளிநாடு செல்லக்கூடாது என்று ராஜீவ் சக்சேனாவுக்கு உத்தரவிட்டார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை