கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

ஜார்கண்ட் பட்ஜெட் கூட்டத்தொடர்: ஹேமந்த் சோரனுக்கு அனுமதி மறுப்பு

ஜார்கண்ட் சட்டசபையில் இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி கோரி ஹேமந்த் சோரன் மனு தாக்கல் செய்திருந்தார்.

தினத்தந்தி

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரியாக இருந்து வந்த ஹேமந்த் சோரனை நிலமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கடந்த மாதம் 31-ந் தேதி கைது செய்தது. அதை தொடர்ந்து அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

அமலாக்கத்துறையின் 13 நாள் காவல் முடிவடைந்ததை அடுத்து, கடந்த 15-ந் தேதி ஹேமந்த் சோரன், ராஞ்சியில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜார்கண்ட் சட்டசபையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தான் பங்கேற்க அனுமதி கோரி ஹேமந்த் சோரன் ராஞ்சி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஹேமந்த் சோரன் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்க மறுத்த நீதிபதி அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்