தேசிய செய்திகள்

கொச்சிக்கு விமானத்தில் கடத்திய ரூ.6½ கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்

சந்தேகத்தின் அடிப்படையில் அப்துல் சமத் என்பவரை கலால்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

தினத்தந்தி

பெரும்பாவூர்,

பேங்காங்கில் இருந்து கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வந்திறங்கிய ஒரு பயணியின் நடவடிக்கையில் கலால் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை கலால் துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பெட்டியில் 6 கிலோ உயர்ரக கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையில் அவர் வயநாடு மாவட்டம் கல்பெட்டா பகுதியை சேர்ந்த அப்துல் சமத் (45) என்பதும், சிறிய பாக்கெட்டுகளில் உயர்ரக கஞ்சாவை மறைத்து வைத்து விமானத்தில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரை கலால் துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.6 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் அங்கமாலி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கேரளாவில் சமீபத்தில் நடந்த அதிக அளவிலான போதைப்பொருள் வேட்டை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு