பெங்களூரு:
கனிம மற்றும் நில அறிவியல் துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். அதில் அவர் பேசியதாவது:-
பல்வேறு நாடுகளில் கனிம வயல்கள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் நவீனமயம் ஆக்கப்பட்டுள்ளன. அதே போல் கர்நாடகத்திலும் கனிம வயல்கள் நவீனமயம் ஆக்கப்படும். அதற்காக தலைமை செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்படும். அந்த குழு அதற்கான தேவையான வழிகாட்டுதல்களை உருவாக்கும். ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் புதிய மணல் கொள்கையை உருவாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலரின் கட்டுப்பாட்டில் உள்ள மணல் வளங்களை மீட்டெடுக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.