தேசிய செய்திகள்

பொருளாதார அறிஞர் அமர்தியாசென்னுக்கு ஸ்பெயின் நாட்டின் உயரிய விருது

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்தியாசென்னுக்கு ஸ்பெயின் நாட்டின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய பொருளாதார அறிஞர் அமர்தியா சென் 1998-ல் நோபல் பரிசு வென்றார். இவருக்கு தற்போது ஸ்பெயின் நாட்டின் உயரிய விருதான பிரின்சஸ் ஆப் ஆஸ்ட்ரியாஸ் விருது கிடைத்துள்ளது. சமூக அறிவியலுக்கான பிரிவில் அவரது பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ஸ்பெயின் நாட்டு அமைப்பு நேற்று வெளியிட்டது.

சமூக அறிவியல் பிரிவில், 20 நாடுகளை சேர்ந்த 41 பேர் பரிந்துரைக்கப்பட்ட இந்த பரிசுக்கு 87 வயதான அமர்தியாசென் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வறுமை மற்றும் பஞ்சங்கள் என்ற அவரது ஆராய்ச்சிக்காக இந்த பரிசுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது, சிறிய சிலையுடன், 50 ஆயிரம் யூரோ தொகை பரிசாக கொண்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு