தேசிய செய்திகள்

கரும்பு கொள்முதல் விலை ரூ.25 உயர்வு ஒரு நகைச்சுவை - ராகேஷ் டிகைட்

கரும்பு கொள்முதல் விலை ரூ.25 உயர்த்தி உள்ளது உத்தரபிரதேச அரசு விவசாயிகளை கேலி செய்வதாகும் என விவசாய அமைப்புகள் கண்டனம்.

முசாபர்நகர்,

உத்தரபிரதேச மாநிலத்தின் கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ. 325 ஆக இருந்தது. அதில் குவிண்டாலுக்கு ரூ. 25 உயர்த்தி கரும்பு கொள்முதல் விலையை ரூ. 350 ஆக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார்.

பாரதிய கிசான் யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ராகேஷ் டிகைட், குவிண்டாலுக்கு 25 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பது என்பது விவசாயிகளால் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது உத்திரபிரதேச அரசு, விவசாயிகளை கேலி செய்வது போன்றது என்று கூறி உள்ளார்.

மேலும் அவர், அண்டை மாநிலங்களில் டீசல் விலை குறைவாக இருப்பதாகவும் கரும்பு கொள்முதல் விலை அதிகமாக இருப்பதாகவும் உத்தரபிரதேசத்தில் டீசல் விலை அதிகமாக இருப்பதால், மாநில அரசின் உயர்வு போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்து உள்ளார்.