ஜோத்பூர்,
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த 12-ந் தேதி, அவர் மத்தியபிரதேச மாநிலம் மண்டுவில் சுற்றிப்பார்த்தபோது தவறி கீழே விழுந்தார். அவரது வலது கையில் காயம் ஏற்பட்டது. பின்னர், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு ஹிலாரி சென்றார்.
அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவரது வலது கையில் சிடி ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கப்பட்டது. இதில், மணிக்கட்டில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.