தேசிய செய்திகள்

இமாசல பிரதேசம்: ஒரே கிராமத்தில் 150 பேருக்கு வயிற்றுப்போக்கு

இமாசல பிரதேச மாநிலத்தில் ஒரே கிராமத்தில் 150 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

தினத்தந்தி

அமீர்பூர்,

இமாசல பிரதேச மாநிலம் நடவுன் சுற்றுப்பகுதியில் ரங்காஸ், கந்த்ரோலா, ஜோல்-சபத் என பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்களுக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இதனை அறிந்த அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்தனர். அங்கு வினியோகிக்கப்படும் குடிநீரை சோதனைக்காக எடுத்து சென்றனர். மேலும் குடிநீர் வினியோகம் அப்பகுதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்