ஷிம்லா,
இமாச்சல பிரதேச மாநிலத்தின் கங்க்ரா மாவட்டத்தில் உள்ள ஜவாலி சப்-டிவிஷன் என்ற இடத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மலைப்பாதை வழியாக சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 35 மாணவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளதை கொண்டாடும் வகையில், தர்மசாலாவில் இன்று பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்ட பேரணி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள சென்ற மாணவர்கள் எனக் கூறப்படுகிறது.