இந்தூர்
வெள்ளிக்கிழமை இந்தூர் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார் அப்போது கூறியதாவது:-
அரசாங்கம் தனியாக அபிவிருத்தியை கொண்டு வரமுடியாது மற்றும் சமுதாயத்தில் மாற்றங்கள் தேவை.
ஜெர்மனி நாடு யாருடையது ஜெர்மனியர்களுக்கானது, பிரிட்டன் நாடு பிரிட்டிஷ்காரர்களுக்கானது.அமெரிக்க அமெரிக்கர்களுக்கானது. அதேவழியில் இந்துஸ்தான் என்பது இந்துக்களுக்கானது. அதற்காக , இந்துஸ்தான் மற்ற மக்களின் நாடு அல்ல என்று அர்த்தம் இல்லை.
பாரத மாதாவின் மகன்கள் இந்திய முன்னோர்களின் சந்ததியினர் அனைவரையும் 'இந்து' என்ற வார்த்தைக்கு உட்படுத்துகிறது.மற்றும் இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்ப அவர்கள் வாழ்கின்றனர்.எந்த ஒரு தலைவரோ அல்லது கட்சியோ நாட்டை பெரியதாக மாற்றமுடியாது ஆனால் அது ஒரு மாற்றம் தேவை, நாம் அதற்கு சமுதாயத்தை தயார்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.