புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,40,74,564 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,73,123 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தொல்லியல் துறையின் கீழ் உள்ள அனைத்து வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மே 15-ம் தேதி வரை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேல் தனது டுவிட்டரில், கொரோனா பரவல் அதிரிப்பைத் தொடர்ந்து தொல்பொருள் துறையின் கீழ் உள்ள அனைத்து நினைவுச்சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மே 15-ம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை உடனடியாக மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் பதிவிட்டுள்ளார்.