சண்டிகார்,
பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக ஹிசார் தொகுதியில் இருந்து சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டவர் டி.பி. வாட்ஸ் (வயது 69). புனே நகரிலுள்ள ஆயுத படை மருத்துவ கல்லூரியின் முன்னாள் தளபதியாகவும் பணியாற்றி உள்ளார்.
இவரிடம் ஜம்மு மற்றும் காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீதுள்ள வழக்குகளை வாபஸ் பெறும் மாநில அரசின் முடிவு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கல் வீச்சு சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கியால் சுடுங்கள் என்று கூறினார்.
பாகிஸ்தான் இந்தியாவுடன் நேரடி போரில் பல முறை தோல்வியை ருசித்தபோதிலும் பாடம் கற்று கொள்ளவில்லை. அது தற்காலிக போரில் ஈடுபட்டு வருகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள நமது படையினர் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகின்றனர்.
காஷ்மீரில் ஒவ்வொரு நாளும் வீரர்கள் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவர்கள் தாக்கப்பட கூடாது. கல் வீச்சும் நடத்தப்பட கூடாது என கூறியுள்ளார்.