தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர்: ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு - காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். இதில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒருவன் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி என அடையாளம் காணப்பட்டது.

பல பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய, மெஹ்ரஸுத்தின் ஹல்வாய் - 2011 ஆம் ஆண்டு பயங்கரவாத இயக்கத்தில் இணைந்ததாகவும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பயங்கரவாதத்தை பரப்புவதில் கைதேர்ந்தவராக செயல்பட்டதாகவும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து