தேசிய செய்திகள்

11 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி கைது

11 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி கைது

தினத்தந்தி

புதுடெல்லி, -

காஷ்மீரில் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய ஜாவைத் அகமது மட்டூ (வயது 32) என்ற பயங்கரவாதி கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இவரது தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்து போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது திருட்டு காரில் வந்த பயங்கரவாதி ஜாவைத் அகமது மட்டூவை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.காஷ்மீரின் சோபூரை சேர்ந்த மட்டூ, 11 பயங்கரவாத தாக்குதல் வழக்குகளில் தேடப்பட்டு வந்தார். ஹிஸ்புல் முஜாகிதீன், அல்-பதர் போன்ற அமைப்புகளில் இயங்கி வந்த இவர், கடந்த 2010-ம் ஆண்டு முதல் காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வந்தார். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்