தேசிய செய்திகள்

‘ஒகி’ புயல் பாதிப்பு குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழு தலைவரிடம் ராஜ்நாத் சிங் ஆலோசனை

‘ஒகி’ புயல் பாதிப்பு குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழு தலைவரிடம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

புதுடெல்லி,

தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது குமரி கடல் பகுதிக்கு நகர்ந்து சென்று நேற்று அதிகாலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு ஒக்கி என வங்காள தேசம் பெயர் சூட்டியது. ஒக்கி புயல் நேற்று காலை கன்னியாகுமரியில் இருந்து 180 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு இருந்தது.

20 கி.மீ. வேகத்தில் அது கன்னியாகுமரி நோக்கி நகர்ந்து வந்தது. நேற்று பிற்பகலில் கன்னியாகுமரிக்கு மிக அருகில் 60 கி.மீ. தொலை வில் நெருங்கியது.

மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்தில் புயல் காற்று தரைப் பகுதி நோக்கி வீசியதால் சூறைக் காற்றுடன் மழை கொட்டியது. இதனால் தென் மாவட்டங்கள் வெள்ளக் காடாக மாறியது.

தற்போது திருவனந்தபுரத்துக்கு மேற்கே 230 கி.மீ. தொலைவிலும், மினிக்காய் தீவில் இருந்து கிழக்கு தென் கிழக்கில் 160 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. படிப்படியாக நகர்ந்து லட்சத்தீவுக்கு செல்கிறது. அதன் பிறகு மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு சென்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஒக்கி புயல் பாதிப்பு குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழு தலைவரிடம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொலைபேசியில் நிலைமை குறித்து கேட்டறிந்தார். சூழ்நிலைக்கு ஏற்ப மீட்பு படையினர் தயாராக இருக்க வேண்டும் என உத்தரவிட்டார். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு