தேசிய செய்திகள்

வீட்டில் புகுந்து திருட்டு; தொழிலாளி பிடிபட்டார்

உல்லால் அருகே வீட்டில் புகுந்து திருடில் ஈடுபட்ட தொழிலாளி பிடிபட்டார்.

தினத்தந்தி

மங்களூரு;

தட்சிண கன்னடா மாவட்டம் உல்லால் தாலுகா சோமேஷ்வர் பகுதியை சோந்தவர் பிரசாந்த். அவர் கடந்த 7-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று இருந்தார்.

அப்போது மர்மநபர் ஒருவர் பிரசாந்த்தின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 57 கிராம் தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி சென்றார். இதுகுறித்து பிரசாந்த் உல்லால் போலீசில் புகார் அளித்து இருந்தார்.

அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் அந்த திருட்டில் ஈடுபட்ட மஸ்திகட் பகுதியை சோந்த மோவாஸ் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து