தேசிய செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் உள்துறை மந்திரி அமித் ஷா சந்திப்பு

நாளை எதிர்க்கட்சி கூட்டணியினர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க உள்ளநிலையில் உள்துறை மந்திரி அமித் ஷா இன்று அவரை நேரில் சந்தித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்முவை எதிர்க்கட்சிகள் (I.N.D.I.A.) கூட்டணியினர் நாளை சந்திக்க உள்ள நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்துப் பேசினார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை உள்துறை மந்திரி அமித்ஷா சந்தித்து பேசியதாக ஜனாதிபதி மாளிகையின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் நாளை ஜனாதிபதியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியிடம் மனு அளிக்க உள்ளன. மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறாதது குறித்தும் முறையிட உள்ளதாக கூறப்படுகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு