புதுடெல்லி,
பயங்கரவாத தடுப்பு, எல்லைப்புற நடவடிக்கை, போதைப்பொருள் தடுப்பு போன்ற சிறப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படும் படையினருக்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு நடவடிக்கைகளுக்கான பதக்கம் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு இப்பதக்கம் உருவாக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்த பதக்கத்துக்கு மத்திய படைகள் மற்றும் பல்வேறு மாநில போலீசார் 397 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 260 பேர், கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு சீன படைகளுடன் துணிச்சலாக மோதிய இந்தோ-திபெத்திய எல்லை போலீசார் ஆவர். அவர்கள் சண்டையில் ஈடுபட்டதுடன், ராணுவத்தினருக்கு தேவையான தளவாடங்களை கொண்டு சேர்ப்பதிலும் திறமையாக செயல்பட்டனர்.