கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து வந்த சசிகலா நாளை விடுதலையாக உள்ளார். இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த ஜனவரி 20ஆம் தேதி சிகிச்சைக்காக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. சசிகலா ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 98% லிருந்து 97% ஆக குறைந்துள்ளது. சசிகலா சீராக உணவு உட்கொள்கிறார். உதவியுடன் நடக்கிறார். சசிகலாவுக்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கும் ஒத்துழைக்கிறார். ரத்தத்தில் சர்க்கரை அளவு 178-ஆகவும், ஆக்சிஜன் அளவு 97-ஆகவும் குறைந்துள்ளது. சசிகலா உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்