தேசிய செய்திகள்

வீடு புகுந்து ரூ.6 லட்சம் நகை-பணம் திருட்டு

பெல்தங்கடி அருகே வீடு புகுந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

மங்களூரு:-

கட்டிட தொழிலாளி

தட்சிண கன்னட மாவட்டம் பெல்தங்கடி தாலுகா உஜிரி அருகே கல்லே பகுதியை சேர்ந்தவர் பெலிக்ஸ். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கிரேட்டா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் வேலை செய்து வருகிறா. பெலிக்ஸ் வெளியூரில் தங்கி கட்டி வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கிரேட்டா வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளா. அப்போது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மாமநபாகள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் பீரோவில் இருந்த தங்க நகை மற்றும் ரொக்கப்பணத்தை திருடி சென்றுவிட்டனர்.

தங்க நகை திருட்டு

இந்தநிலையில் மதியம் வெளியூரில் இருந்து வீட்டிற்கு வந்த பெலிக்ஸ், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன.

அப்போது பெலிக்ஸ், பீரோவை சோதனை செய்த போது, பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மாயமாகி இருந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். இதனால் யாரோ மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான நகை-பணத்த திருடி சென்றது தெரியவந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து பெலிக்ஸ், பெல்தங்கடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு, மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சோதனை நடத்தினர். மோப்பநாய் திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிசென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு மர்மநபாகளை வவைவீசி தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து