தேசிய செய்திகள்

புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்

உலக வானிலை ஆய்வு அமைப்பும் மேலும் 2 அமைப்புகளும் இணைந்து 2000–ம் ஆண்டில் புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறையை கொண்டுவந்தன.

தினத்தந்தி

புதுடெல்லி,

உலக வானிலை ஆய்வு அமைப்பும் மேலும் 2 அமைப்புகளும் இணைந்து 2000ம் ஆண்டில் புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறையை கொண்டுவந்தன. இதன்மூலம் உலகளவில் வானிலை முன்னறிவிப்பாளர்கள், பொதுமக்கள், வானிலை கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு தொடர்புகொள்ள வசதியாகவும், எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடுவதற்கு உதவியாகவும் இந்த முறை கொண்டுவரப்பட்டது. உலகளவில் 9 கடல் மண்டலங்களில் உள்ள நாடுகள் இந்த பெயர்களை வழங்குகின்றன.

இப்போது கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ள புயலுக்கு ஒகி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை வங்காளதேசம் வழங்கியுள்ளது. வங்காள மொழியில் ஒகி என்றால் கண் என்று அர்த்தம்.

அடுத்த புயலுக்கு இந்தியா பெயர் வழங்கியுள்ளது. அதன் பெயர் சாகர். இந்தி வார்த்தையான இதற்கு கடல் என்று அர்த்தம்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு