தேசிய செய்திகள்

மும்பையில் விபத்தில் சிக்கிய டேங்கர் லாரி, தீ கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு

மும்பையில் மெத்தனால் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது.

தினத்தந்தி

வடலா,

மும்பையின் வடலா அருகே உள்ள பக்தி பார்க் பகுதியில், மெத்தனால் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி , மோனோ ரயில் மேம்பால தூண் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் லாரி கொழுந்து விட்டு எரிந்தது. கரும்புகையுடன் தீ பற்றி எரிந்தது.

நேற்று இரவு 10.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், நிகழ்விடத்திற்கு ஐந்து தீ அணைப்பு வாகனங்கள் வந்தன. பலத்த போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில், லாரியின் ஓட்டுநர் தீயில் கருகி உயிரிழந்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்