தேசிய செய்திகள்

“மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை ஒழிக்கப்படும்” - மத்திய மந்திரி உறுதி

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை ஒழிக்கப்படும் என மத்திய மந்திரி உறுதியளித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய சமூக நீதி அமைச்சகம் சார்பில், நிலையான துப்புரவு பணி குறித்த பயிலரங்கம் நடைபெற்றது. அதில், மத்திய சமூக நீதித்துறை மந்திரி தாவர் சந்த் கெலாட் பேசியதாவது:-

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை ஒழிப்பதற்காக, மனித கழிவுகளை அகற்றுவோர் பணியமர்த்தலை தடுத்தல் மற்றும் மறுவாழ்வு சட்டம்-2013 கொண்டு வரப்பட்டது. இதை பயன்படுத்தி, மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது.

பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய எந்திரங்களை பயன்படுத்தி சுத்தப்படுத்துவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன்மூலம் உயிரிழப்புகள் தடுக்கப்படும். இந்த பணியில் ஈடுபடுவோருக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, 500 நகராட்சி ஆணையர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி