ஐதராபாத்:
அமலாக்க துறை மெஹுல் சோக்ஸி மற்றும் நிரோவ் மோடிவின் உதவியாளரான மிஹிர் பன்சாலிக்கு சொந்தமான ஏபி ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லரி பார்க் என்ற நகைக்கடை ஐதராபாத்தில் உள்ள பஞ்சார ஹில்சில் உள்ளது. இங்கு அமலாக்கத்துறை சோதனையின் போது மிகவும் பளபளப்பான ஒரு வைரத்தை கண்டெடுத்தனர். அதன் மதிப்பு ரூ.218.46 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
பல கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட மோடி மற்றும் அவரது மாமா சோக்ஸி மொத்தம் ரூ .4,489 கோடி சொத்து மதிப்புள்ள சொத்துகள் இணைக்கபட்டு உள்ளன.
அக்டோபர் 17 ம் தேதி, PMLA இன் கீழ் மூன்று தற்காலிக உத்தரவுகளை இந்தியாவில் உள்ள சொத்துக்களை இணைப்பதற்கு மத்திய ED ன் மும்பை அலுவலகத்தால் வழங்கப்பட்டது.