தேசிய செய்திகள்

ஒருதலைக்காதல் இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்

தன்னை திருமணம செய்து கொள்ள மறுத்ததால் இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்தார் வாலிபர். #Tamilnews

தினத்தந்தி

ஐதராபாத்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜான்கி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சூப்பர்மார்க்கெட் ஒன்றில் விற்பனையாளராக வேலைபார்த்து வந்தார். மூசாபேட்டை பகுதியில் தனது தோழியுடன் தங்கி இருந்தார்.

ஜான்கியுடன் அதே சூப்பர்மார்க்கெட்டில் ஆனந்த் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் ஜானகியை ஒருதலையாக காதலித்து வந்து உள்ளார்.

ஆனந்த் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தினமும் ஜான்கியை வற்புறுத்தி வந்தார்.

நேற்றும் வழக்கம் போல் ஜான்கி தங்கி இருந்த வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் ஜான்கி ஏற்று கொள்ளவில்லை. இதனால் கோபம் அடைந்த ஆனந்த் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஜான்கியை சரமாறியாக குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ஜான்கி அதே இடத்தில் பலியானார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். ஆனந்த் குற்றத்தை ஒப்புகொண்டு உள்ளார்.

#Tamilnews #jiltedlover

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்