ஐதராபாத்,
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது பட்டப்படிப்பு மாணவர் ஒருவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் சனிக்கிழமை இரவு தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முதற்கட்ட விசாரணையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட அந்த மாணவர் பணத்தை இழந்து பெரும் நஷ்டம் அடைந்துள்ளார். இதன் காரணமாக கடன் வாங்கியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.