ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் .இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கார் ஷோரூமில் பணியாற்றி வருகிறார்.இவரும் சுல்தானா என்ற முஸ்லீம் பெண்ணும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் இருவரும் இருவீட்டார் எதிப்பையும் மீறி 3 மாதங்களுக்கு முன்னர் இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இருவரும் பணி முடித்து வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது அவர்கள் வண்டியை மறித்த சிலர் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து நாகராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவரை அருகில் உள்ளவர்கள் அழைத்துச்சென்றனர். எனினும், செல்லும் வழியிலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பெண்ணின் உறவினர்கள் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பெண்ணின் உறவினர்களை கைது செய்துள்ளனர்.