தேசிய செய்திகள்

காங்கிரஸ் நண்பர்களை அபிநந்தன் மீசையுடன் பார்க்க ஆவலாக இருக்கிறேன் - எம்.பி. பேச்சுக்கு உமர் அப்துல்லா பதில்

காங்கிரஸ் நண்பர்களை அபிநந்தன் மீசையுடன் பார்க்க ஆவலாக இருப்பதாக எம்.பி. பேச்சுக்கு உமர் அப்துல்லா பதில் அளித்தார்.

ஸ்ரீநகர்,

மக்களவையில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் துணிச்சலை பாராட்டி பேசிய காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அபிநந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா சமூக வலைத்தளம் மூலம் பதில் அளித்துள்ளார்.

அதில், இந்தியாவுக்கு ஒரு தேசிய மீசை வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸ் கட்சியில் உள்ள எனது நண்பர்கள் அனைவரையும் அபிநந்தன் மீசையுடன் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...