தேசிய செய்திகள்

சபரிமலை தீர்ப்பு: மகிழ்ச்சி அளிக்கிறது சுப்பிரமணிய சுவாமி டுவீட்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றுபாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டி பல வருடமாக வழக்கு நடந்து வருகிறது. மிக நீண்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. 5 நீதிபதிகள் அமர்வில் 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில் சபரிமலையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.

இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்.

சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வோம் என்று திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?