தேசிய செய்திகள்

அரசியல் ரீதியாக பிரதமரிடம் எதுவும் பேசவில்லை: டெல்லியில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி

அரசியல் ரீதியாக பிரதமரிடம் எதுவும் பேசவில்லை என்று டெல்லியில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கேபி முனுசாமி, மைத்ரேயன் எம்.பி, மனோஜ்பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ பன்னீர்செல்வம் கூறியதாவது:- தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துக் கூறினோம். விவசாயிகளின் வங்கிக் கடன்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம். தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை, காவிரி மேலாண்மை வாரியம், நீட் தேர்வில் விலக்கு, அத்திக்கடவு - அவிநாசி திட்டம், சேலம் உருக்காலை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எடுத்து கூறினோம்

அரசியல் ரீதியாக பிரதமரிடம் எதுவும் பேசவில்லை ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம். எங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்