தேசிய செய்திகள்

விவசாயிகளின் கஷ்டங்களை அருகில் இருந்து கவனித்துள்ளேன் - பிரதமர் மோடி

விவசாயிகளின் கஷ்டங்களை அருகில் இருந்து கவனித்துள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுவதாக அறிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது, 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் நன்மைக்காகவே கொண்டுவரப்பட்டன. ஆனால், எங்களின் சிறந்த முயற்சிக்கு பின்னரும் சில தரப்பு விவசாயிகளுக்கு வேளாண் சட்டம் குறித்து எங்களால் புரியவைக்கமுடியவில்லை.

விவசாயிகளை வளர்ச்சியடைய வைப்பதே 3 வேளாண் சட்டங்களின் நோக்கம். 50 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் நான் விவசாயிகளின் கஷ்டங்கள் மற்றும் சவால்களை மிகவும் அருகில் இருந்து கவனித்துள்ளேன். 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம். வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான நடைமுறை இம்மாதம் தொடங்க உள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் நடைபெறும்.

போராடும் விவசாயிகள் அவர்களின் வீடுகளுக்கு சென்று குடும்பத்துடன் இணைய வேண்டும் என நான் வேண்டிக்கொள்கிறேன். மேலும் புதிய தொடக்கத்தை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்றார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை