புதுடெல்லி,
உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்று பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, "ஒரு திறன் வாய்ந்த தலைவரை இழந்துள்ளோம். நேர்மை மற்றும் நல்ல நிர்வாகத்தின் மறு உருவமாக அவர் திகழ்கிறார். அவரின் கனவை நிறைவேற்ற அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
கல்யாண் சிங்கை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு மன வலிமை அளிக்க பிரார்த்திக்கிறேன் என்று கூறினார்.