தேசிய செய்திகள்

வருமான வரித்துறையின் நடவடிக்கையை எதிர்த்த காங்கிரசின் மனு தள்ளுபடி

வருமான வரித்துறை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மக்கான் கூறினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த மாத இறுதியில் வருமான வரித் துறை காங்கிரஸ் கட்சியின் முக்கியமான நான்கு வங்கிக் கணக்குகளை முடக்கியது. இதை எதிர்த்து, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் முறையிட்டது. அதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கு முடக்கத்தை தற்காலிகமாக ரத்து செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டது. வங்கிக் கணக்கை முடக்கிய வருமான வரித்துறை 210 கோடி ரூபாய் அபராதமும் விதித்து இருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மேல் முறையீட்டு மனுவை வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வருமான வரித்துறை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மக்கான் கூறினார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து