தேசிய செய்திகள்

நெருக்கடி நிலை காலத்தில் நானும் சிறு பாத்திரம் வகித்தேன் - ஹேமா மாலினி

பிரபல பாலிவுட் நடிகையும் பாஜகவின் எம்.பியுமான ஹேமா மாலினி நெருக்கடி நிலைக்காலத்தில் தானும் ஒரு சிறு பாத்திரம் வகித்ததாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தினத்தந்தி

மதுரா

நெருக்கடி நிலை காலத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ஷோலே படத்தின் காட்சிகள் மிகுந்த கூட்டத்துடன் இருந்ததால் எதிர்க்கட்சிக்காரர்கள் பலர் திரையரங்குற்கு வந்து கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து கொள்வார்கள். இதனால் அவர்களை கைது செய்வது காவல்துறைக்கு சிரமமாக இருந்தது என்று விளக்கினார் ஹேமாமாலினி. இதன் மூலம் தானும் ஒரு சிறு பங்களிப்பை செய்தேன் என்று கூறினார்.

நெருக்கடி நிலையின் 42 ஆவது நினைவு கூட்டத்தில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.

நெருக்கடி நிலை துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய அவர் அரசியல்வாதிகளுக்கும், பொதுமக்களுக்கும் அது கொடுமையானதாக இருந்தது என்றும் குறிப்பிட்டார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்