கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள தாவணகெரே தெற்கு, பாகல் கோட்டையில் வருகிற 9-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் களத்தில் 34 வேட்பாளர்கள் உள்ளனர். பாகல் கோட்டையில் காங்கிரஸ் சார்பில் உமேஷ் மேட்டி போட்டியிடு கிறார்.
அவரை ஆதரித்து முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் சித்த ராமையா நேற்று 2-வது நாளாக பாகல்கோட்டையில் பல பகு திகளில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார். இதற்கிடையே சித்தராமையா அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் நான் கட்சி மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவேன். இதுகுறித்து பா.ஜனதாவினர் கூறும் கருத்துகளுக்கு பதிலளிக்க மாட்டேன். பாகல்கோட்டை வளர்ச்சிக்காக பா.ஜனதா ஆட்சி காலத்தில் எதையும் செய்ய வில்லை. எச்.ஒய்.மேட்டி மந்திரியாக இருந்தபோது, அங்கு ஏராளமான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இதனால் பாகல் கோட்டை வளர்ச்சி அடைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.