புதுடெல்லி,
அசாமில் சிவசாகர் பகுதியில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி நாளை கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் 1.06 லட்சம் நில பட்டாக்கள் மற்றும் சான்றிதழ்களை மக்களுக்கு அவர் வழங்குகிறார்.
இதுபற்றி பிரதமர் மோடி கூறும்பொழுது, அசாம் மாநில மக்களில் நானும் ஒருவனாக நாளை காலை இருப்பேன். சிறந்த மாநிலம் ஆன அசாமின் உரிமைகள் மற்றும் தனித்துவ கலாசாரம் ஆகியவற்றை பாதுகாக்க, சாத்தியம் நிறைந்த ஒவ்வொரு விசயமும் மேற்கொள்ளப்படுவதற்கு நாங்கள் ஈடுபாடு காட்டி வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.