தேசிய செய்திகள்

"கால்வாய் பணிகள் முடியும் வரை நகரமாட்டேன்" - விடிய விடிய அமைச்சர் போராட்டம் - கர்நாடகாவில் பரபரப்பு

கர்நாடகாவில் கால்வாய் சீரமைப்பு பணிகளை முடிக்கும் வரை நகரமாட்டேன் எனக்கூறி அம்மாநில அமைச்சர் விடிய விடிய தங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லாரி,

கர்நாடகா மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கால்வாய் சீரமைப்பு பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீராமுலு நேரில சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, எல்எல்சி கால்வாய் சீரமைக்கும் பணி மந்த கதியில் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனால் கால்வாய் சீரமைப்பு பணிகளை முடிக்கும்வரை நகர மாட்டேன் எனக்கூறி அங்கேயே முகாமிட்டார். இரவில் அங்கேயே படுத்து உறங்கிய அமைச்சர், காலையில் அங்கேயே குளித்துவிட்டு சாப்பிட்டுள்ளார். இதையடுத்து சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொண்டனர்.

அதே நேரத்தில், அரசுக்கு எதிராகவும் போராட்டம் நடத்துங்கள் என்று அம்மாநில காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...