தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் விளையாட்டுக்காக குரல் எழுப்புவேன் - தடகள வீராங்கனை பி.டி.உஷா

நாடாளுமன்றத்தில் விளையாட்டுக்காக குரல் எழுப்புவேன் என தடகள வீராங்கனை பி.டி.உஷா தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக உள்ளனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது

அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்தான்.

அதன் அடிப்படையில் தற்போது மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்.பிக்களாக நியமித்து இருக்கிறார்.

இந்த நிலையில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ள பி.டி.உஷா, மாநிலங்களவை எம்.பி. பதவி மகிழ்ச்சியளிக்கிறது. இது விளையாட்டுக்கு கிடைத்த கௌரவம். நாடாளுமன்றத்தில் விளையாட்டுக்காக குரல் எழுப்புவேன் என்று தெரிவித்து உள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்