புதுடெல்லி,
இந்திய விமானப் படையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக அமெரிக்காவிடம் இருந்து 22 அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு, 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தம் கையெழுத்தாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், முதற்கட்டமாக 4 அப்பாச்சி அதிநவீன ஹெலிகாப்டர்களை அமெரிக்கா, இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்தது.
ஒவ்வொரு அப்பாச்சி ஹெலிகாப்டரின் விலை ரூ.4,168 கோடியாகும். உலகின் அதிநவீன ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்றாகும். அடுத்த வாரத்தில் மீண்டும் 4 ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்படும். 2020-ம் ஆண்டில் மீதமுள்ள அனைத்து ஹெலிகாப்டர்களும் வழங்கப்படும் என்று போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.